MKS Others

'25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பண்ணிருக்காங்க...' 'எந்த' ஆன்லைன் தளத்தில்...? - ஐபோன் லவ்வர்ஸ்-க்கு கிரேட் நியூஸ்...!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Issac | Dec 07, 2021 10:52 AM

ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஐபோன் மாடலுக்கு அட்டகாசமான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

price cut has announced for Apple\'s popular iPhone model

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்-12 ப்ரோ மாடல் ஐபோன் விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. விலை அதிகம் என்றாலும் பல இளைஞர்கள் வாங்கி வருகின்றனர். இன்னும் பல பேருக்கு அதை வாங்குவது கனவாக உள்ளது. இந்த நிலையில், அமேசான் ஆன்லைன் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

price cut has announced for Apple's popular iPhone model

தற்போது ஐபோன்-12 ப்ரோ மாடல் விலை 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விலை குறைப்பு கிராபைட், கோல்டு, பசிபிக் புளூ மற்றும் சில்வர் என அனைத்து நிறங்கள் மற்றும் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஐபோன்-12 ப்ரோ கடந்த வருடம் ஆப்பிள் அறிமுகம் செய்த லேட்டஸ்ட் மாடல் ஆகும். தற்போது இந்த மாடல் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடம் மட்டுமே வாங்க கிடைக்கிறது. கடந்த வருடம் ஐபோன்-12 ப்ரோ மாடல் இந்திய மதிப்பில் ரூ. 1,19,900 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதன் விலை ரூ. 94,900 என அமேசான் தளத்தில் தள்ளுபடி விலை போக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் '256 ஜிபி' மாடல் விலை ரூ. 99,900 என்றும் '512 ஜிபி' விலை ரூ. 1,07,900 என்றும் விலை குறைந்துள்ளது. சிறப்பு அம்சங்களை பொருத்தமட்டில் ஐபோன்-12 ப்ரோ மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ஓ.எல்.இ.டி. டிஸ்ப்ளே, ஏ-14 பயோனிக் சிப்செட், 12 எம்.பி. மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், 12 எம்.பி. ட்ரூ டெப்த் செல்பி கேமரா போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

Tags : #PRICE #APPLE #IPHONE #AMAZON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Price cut has announced for Apple's popular iPhone model | Technology News.