ஹேக் செய்யப்பட்ட ‘பிரதமர்’ மோடியின் டுவிட்டர் அக்கவுண்ட்.. என்ன ‘டுவீட்’ போட்டிருந்தாங்க தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர். அரசு திட்டங்கள் தொடர்பான விவரங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். பிரதமர் மோடிக்கு அரசு சார்ந்த ஒரு டுவிட்டர் கணக்கும், தனிப்பட்ட முறையில் ஒரு டுவிட்டர் கணக்கும் உள்ளது.
இதில் அரசு சார்ந்த ட்விட்டர் கணக்கான PMO India-வை 45.4 மில்லியன் பேரும், தனிப்பட்ட கணக்கான நரேந்திர மோடி என்ற பக்கத்தை 73.4 பேரும் பின்தொடர்கின்றனர். இந்தநிலையில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கும் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
அப்போது பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து ஒரு டுவீட் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டுள்ளது. அரசு அதிகாரப்பூர்வமாக 500 BTC-ஐ வாங்கி நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கி வருகிறது’ என பதிவிட்டு அதனுடன் ஒரு லிங்கும் இணைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின்னர் பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து உடனடியாக ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கு மீட்கப்பட்டு அதில் பதிவிடப்பட்ட டுவீட் டெலிட் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமரின் அரசு சார்ந்த டுவிட்டர் கணக்கான PMO India-ல் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், ‘பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டுவிட்டர் நிறுவனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு உடனடியாக கணக்கு மீட்கப்பட்டது. இந்த நேரத்தில் பதிவிடப்பட்ட பதிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.