NETFLIX: ‘இனி சின்ராச கையில பிடிக்க முடியாதே’.. வாடிக்கையாளர்கள் மனசு குளிர்ற மாதிரி வந்த ‘அசத்தல்’ அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Dec 16, 2021 11:13 AM

ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Netflix new plans cut prices in India, Full details here

முன்பெல்லாம் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் ரிலீஸாகும் படங்களை ஒரு நாளைக்கு பலமுறை பார்த்து ரசித்து வந்தனர். இதன்பின்னர் ஓடிடி தளங்கள் அறிமுகமான பின் திரைப்படங்கள், சீரிஸ், டாக்குமெண்டரி போன்ற ஏராளமான தொகுப்புகளை ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது. குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமானது.

Netflix new plans cut prices in India, Full details here

அதில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், சோனி லைவ், ஜீ 5, போன்ற ஓடிடி தளங்கள் இந்தியாவில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தின. அதனால் ஓடிடி தளங்களில் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அப்படி உள்ள சூழலில் நெட்பிளிக்ஸ் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

Netflix new plans cut prices in India, Full details here

அதன்படி முன்பிருந்த சந்தா கட்டணங்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அதில் முன்பு ஒரு மாத நெட்பிளிக்ஸ் சந்தா கட்டணம் ரூ.199 ஆக இருந்தது. இது தற்போது ரூ.149 ஆக குறைந்துள்ளது. இது ஒரு மாதத்திற்கான ஆரம்ப கட்டணமாக உள்ளது.

Netflix new plans cut prices in India, Full details here

மேலும் டிவி, மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களில் பார்ப்பதற்கு மாத சந்தா 499 ஆக இருந்தது. இது தற்போது ரூ.199 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.649 பிளான் ரூ.499 ஆகவும், 799 ஆக இருந்த ப்ளான் தற்போது ரூ.649 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் இந்த அதிரடி சலுகை அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Tags : #NETFLIX

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Netflix new plans cut prices in India, Full details here | Technology News.