'ஓடிடிக்கு படையெடுக்கும் முன்னணி நட்சத்திரங்கள்'... 'அல்டிமேட் ஆஃபரை அறிவித்துள்ள நெட்ஃபிளிக்ஸ்'... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட நிலையில், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினார்கள். இதனால் தொலைக்காட்சி மட்டுமே பலருக்கும் ஒரே பொழுதுபோக்காக மாறிப்போனது. இதனால் பலரும் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பது மற்றும் சீரிஸ் பார்ப்பது என தங்களின் நேரத்தைச் செலவிட்டார்கள்.

மக்களின் இந்த ஆதரவு முன்னணி இயக்குநர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களையும் ஓடிடி தளத்தின் மீது கவனம் செலுத்த வைத்தது. இதனிடையே சூர்யா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. இதனால் தற்போது முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஓடிடி தளத்திற்காக பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவை இன்று (டிசம்பர் 5) தொடங்கி நாளை (டிசம்பர் 6) முடிவடைகிறது. இந்திய மக்களிடையே தங்களின் ஓடிடி தளத்தைக் கொண்டுசேர்க்கும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்தச் சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், https://www.netflix.com/in/StreamFest என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரொபைலை அந்த தளத்தில் உருவாக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். சீரிஸ் பார்ப்பவர்களின் முதல் தேர்வாக இருப்பது நெட்ஃபிளிக்ஸ் தான். எனவே திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் உள்ளிட்டவற்றை இலவசமாகப் பார்க்கலாம் என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது வரவேற்பைப் பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்
