“தமிழக மக்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்”...ஓ.பன்னீர்செல்வம் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 02, 2019 03:08 PM

பாஜக-வில் தான் இணைய உள்ளதாக கூறப்படுவது வடிகட்டிய பொய் என்று தமிழக துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ops explains for the controversy statement against him

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சாதாரண மனிதனாக இருந்த தனக்கு பல பெருமைகளை அள்ளித்தந்த அதிமுகவை விட்டு பாஜகவில் சேரப்போகிறேன் என்று உள்நோக்கம் படைத்த சில ஊடகங்கள் அடுக்கடுக்காக புரளியை பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஈட்டவிருக்கும் மாபெரும் வெற்றியை நினைத்து சிலர் குலை நடுங்கி வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதன்மூலம் தன்னையும், தனது அரசியல் வாழ்க்கையையும் காயப்படுத்தி வருவதால் மிகுந்த வேதனை கொள்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும், அதிமுகவை இமையாக காப்பதற்கு தனது ஆயுள் முழுவதையும் கட்சிக்காக ஒப்படைத்து தொண்டாற்றி வரும் ஓர் ஊழியன் என்றும், என்னுடைய உயிர்போகும் நாளில் அதிமுகவின் கொடி போர்த்துவதையே வாழ்நாள் பெருமையாக கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து தன் மீது சுமத்தபடும் பொய் குற்றச்சாட்டுகளை அதிமுகவினரும், தன் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களும் ஏற்கமாட்டார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Tags : #OPANNEERSELVAM #AIADMK #SPEECH