'வலுவிழந்த புயல்'... 'ஆனாலும் தமிழகத்தில் புரட்டி எடுக்கும் மழை'... என்ன காரணம்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த நாட்களாகத் தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விடாமல் பெய்து வரும் இந்த மழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகி இலங்கையில் கரையைக் கடந்த புரெவி புயல் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. புயலாக வந்த அது தற்போது வலுவிழந்து விட்டது. அது வலுவிழந்தாலும் தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனிடையே புயலைப் பொருத்தவரை கடலிலேயே நகர்ந்தால்தான் காற்றின் வேகம் அதிகரிக்கும். அப்போதுதான் புயல் என்பது தீவிர புயலாகவோ அதிதீவிர புயலாகவோ மாறும். ஆனால் புரெவி புயல் இலங்கைக்கும் தமிழகத்திற்கு இடையே உள்ள மன்னார் வளைகுடாவிற்கு அருகே மையம் கொண்டுள்ளது. அதைச் சுற்றிலும் நிலப்பகுதிகள் காணப்படுகிறது. அதன் காரணமாகவும் சற்று காற்று முறிவு ஏற்பட்டதன் காரணமாகவும் அந்த புயல் வலுவிழந்துள்ளது.
ஆனால் புயல் தான் வலுவிழந்து விட்டதே பின்னர் ஏன் இப்படி விடாமல் மழை பெய்கிறது எனத் தோன்றலாம். அதற்கு முக்கிய காரணம் வடகிழக்கு திசையிலிருந்து காற்று நிலப்பகுதியைச் சுற்றி அதன்வழியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை நோக்கிச் செல்கிறது. அவ்வாறாக ஈரப்பதத்தையும் மேகக்கூட்டங்களையும் அந்த காற்றுக் கொண்டு வந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடைகிறது.
அதனால்தான் தமிழகத்தில் மழை பெய்கிறது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அங்கேயே நீடிக்கும் பட்சத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்குத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
