Nenjuku Needhi

மும்பை அணிக்கு ஆதரவாக தினேஷ் கார்த்திக் போட்ட ட்வீட்.. "அதுவும் அவர் போட்ட ஃபோட்டோ இருக்கே.. அது தான் 'செம' வைரல்"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | May 21, 2022 08:45 PM

ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.

dinesh karthik shares photo with mumbai indians jersey

கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.

மறுபக்கம், குஜராத், ராஜஸ்தான் மற்றும் லக்னோ ஆகிய அணிகள், பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது.

முக்கியமான போட்டி

நான்காவது இடத்திற்கு முன்னேற டெல்லி மற்றும் பெங்களூர் அணிகளுக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே 16 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் இருக்கிறது பெங்களூர் அணி. இன்று (21.05.2022) மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டியில், மும்பை அணி வென்றால் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

அப்படி நடக்காமல், டெல்லி அணி வெற்றி பெற நேர்ந்தால், 16 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் அந்த அணியே முன்னேறி விடும். இதனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நான்காவது அணியை தீர்மானிக்க, தற்போது நடைபெற்று வரும் போட்டி, முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தினேஷ் கார்த்திக் பகிர்ந்த ஃபோட்டோ

முன்னதாக, மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என ஆர்சிபி வீரர்கள் கோலி மற்றும் பாப் டு பிளெஸ்ஸிஸ் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆர்சிபியின் ட்விட்டர் பக்கத்தில் கூட, மும்பை அணிக்கு ஆதரவாக சில பதிவுகள் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்றும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. நடப்பு சீசனில், பெங்களூர் அணிக்காக பல போட்டிகளில் சிறப்பாக ஆடி, வெற்றியை தேடிக் கொடுத்திருந்தார் தினேஷ் கார்த்திக். தொடர்ந்து, தங்களின் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால், மும்பை அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி இருந்த தினேஷ் கார்த்திக், மும்பை ஜெர்சியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து, மறைமுகமாக மும்பை அணிக்கு ஆதரவாக இருப்பதை தெரிவித்துள்ளார். இது தொடர்பான பதிவுகள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. மற்றொரு ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல்லும் மும்பை அணியின் ஜெர்சியில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #DINESHKARTHIK #RCB #MI VS DC #IPL 2022 #PLAY OFFS #தினேஷ் கார்த்திக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dinesh karthik shares photo with mumbai indians jersey | Sports News.