IPL2020: “கத்துக்கங்க கணவர்களே!”.. ‘மைதானத்துல இருந்து கோலியும்.. ஸ்டாண்டில் இருந்து அனுஷ்காவும்’.. நெகிழ வைக்கும் #VIRALVIDEO!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிரிக்கெட் வீரர் விராட் கோலி மைதானத்தில் இருந்தபடி, தன் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுடன் செய்த இனிமையான பரிமாற்றம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) கடந்த்ய ஞாயிற்றுக்கிழமை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி மோதியது.
அப்போது சிவப்பு உடை மற்றும் பெரிய தங்க வளைய காதணிகளில் காணப்பட்ட அனுஷ்கா சர்மாவிடம், மைதானத்தில் இருந்தபடியே, அவர் சாப்பிட்டாரா என்று கோலி சைகையால் கேட்கிறார். அனுஷ்காவோ, ஸ்டாண்டிலிருந்து இரு கைகளையும் தம்ப்ஸ் அப் முறையில் காட்டி பதில் அளிக்கிறார். பின்னர் அவர்கள் கை சைகைகள் மூலம் மேற்கொண்ட சுருக்கமான உரையாடல்கள் இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகின்றன.
ஆர்.சி.பி.யின் போட்டிகளின் போது அனுஷ்கா பெரும்பாலும் ஸ்டாண்ட்களில் காணப்படுவார். இந்த மாத தொடக்கத்தில், அவர் கோலிக்கு கைதட்டல் மற்றும் சி.எஸ்.கேவுக்கு எதிராக கோலி, அரைசதம் அடித்தபோது அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்ததை காண முடிந்தது.
விராட் மற்றும் அனுஷ்கா ஜோடி, ஜனவரி மாதம் தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டனர், அதில், “அதன் பின்னர் நாங்கள் மூவராக இருப்போம்! ஜனவரி 2021-ல் வந்து சேர்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
