'3 மாசமா சிங்கப்பூரில் தவிப்பு'... 'ஊருக்கு வந்ததும் அலப்பறை'... 'எனக்கு ஏசி ரூம் கொடுங்க'... வம்பு செய்ததால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்3 மாதங்களாகச் சிங்கப்பூரில் தவித்து, சொந்த ஊருக்குத் திரும்பிய டிக்டாக் பிரபலம் ரௌடி பேபி சூர்யா, கொரோனா பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரௌடி பேபி சூர்யா என்று அழைக்கப்படும் திருப்பூர் அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்புலட்சுமி, டிக்டாக் வீடியோ மூலம் பிரபலமடைந்தவர். அவர் அநாகரிகமாக வீடியோ பதிவிடுவதாக ஏற்கனவே அவர் மீது புகார்கள் உண்டு. இந்நிலையில் ஊரடங்கிற்கு முன்பாக சிங்கப்பூர் சென்ற நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விமானங்கள் ரத்தானதால், நாடு திரும்ப இயலாமல் சிங்கப்பூரில் தவித்து வந்தார்.
இதனிடையே மீண்டும் விமானச் சேவை துவங்கிய நிலையில் அண்மையில் சிங்கப்பூரிலிருந்து கோவை வந்த அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டதை மீறிய சூர்யா, யாருக்கும் தெரியாமல் திருப்பூரில் தான் குடியிருக்கும் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதையறிந்த பக்கத்து வீடுகளில் வசிப்போர் கொரோனா அச்சத்தின் காரணமாக சுகாதாரத்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். சூர்யாவைப் பரிசோதிக்க வீடு தேடி வந்த செவிலியர்களிடம் ஒத்துழைப்பு வழங்க மறுத்து ரகளை செய்துள்ளார். தான் தான் சிங்கப்பூரில் ஏசி அறையில் இருந்ததாகவும், தெர்மல் சோதனை செய்த பின்னர் தான் விமானத்தில் ஏற அனுமதித்ததாகக் கூறி, கொரோனா சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.
இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் அவரை எச்சரித்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். கொரோன பரிசோதனை செய்துகொள்ள மறுத்து சுகாதரதுறை அதிகாரிகளிடம் வம்பில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.