மது அருந்திவிட்டு வாகனம்.. பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம்..!!.. அக்.26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருதா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Oct 26, 2022 12:32 AM

போக்குவரத்து விதிமீறல்களுக்கான புதிய அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

tn govt chennai police new traffic rules update போக்குவரத்து விதி

ஒவ்வொரு மாநில அரசும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தமிழக அரசு போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அரசாரணையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.  இதில் முக்கிய அம்சமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவருடன் பயணிக்கக் கூடிய அந்த நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்கிற விதிமுறை அறிவிக்கப்பட்டது பிரபலமானது. 

இதேபோல், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாதவர்களுக்கான அபராதமும் அறிவிக்கப்பட்டது. ஆம், அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதுடன், அதிக அளவில் ஒலிமாசுபாடு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், வரம்பு மீறி சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் உட்பட பலவற்றுக்கும் அபராதம் விதிப்பது குறித்த புதிய அரசாணை வெளியானது.

அடிப்படை விதிகளான ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அளவிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மற்றும் அவருடன் பயணிப்போருக்கு பத்தாயிரம் வரை அபராதம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன,  அத்துடன் அல்லாமல், பதிவு செய்யப்படாத வாகனங்கள் பிடிபட்டால், 2,500 ரூபாய் அபராதம் இதுவரை விதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த தொகை தற்போது 5000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,  இன்சூரன்ஸ் இன்றி வண்டி ஓட்டுபவர்களுக்கு 2000 ரூபாய் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக அபாயகரமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கும், வாகன பந்தயங்களில் ஈடுபடுவோருக்குமான அபராதம் 10 ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட இந்த மோட்டார் வாகன சட்ட விதிகள் வரும் 28-ஆம் தேதி முதல் அமலாகும் என்றும், அன்று முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விதிகளும் அபராத வசூலிப்புகளும் அக்டோபர் 26-ஆம் தேதி முதலே நடைமுறைப்படுத்தப்படுவதாக புதிய தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

Tags : #NEW TRAFFIC RULES #TNGOVT #NEW ROAD RULES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn govt chennai police new traffic rules update போக்குவரத்து விதி | Tamil Nadu News.