‘100% GST திருப்பித் தரப்படும்.. 50% மானியம்!’.. மின் வாகனத்துறையில் ‘தமிழக அரசின்’ அசத்தல் முயற்சி!.. உருவாகிறது 1.5 லட்சம் வேலை வாய்ப்புகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்சார வாகன உற்பத்திக்கென தனி தொழிற்பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதை பலரும் வரவேற்று வருகின்றனர்.

மின்சார வாகன உற்பத்திக்கு என்று தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக தமிழகத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக தமிழக அரசு பலவிதமான ஊக்கம் அளிக்கும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் Auto CXO Roundtable தலைமை செயல் அதிகாரி நீரஜ் மிட்டல் கூறுகையில் தனி தொழிற்பூங்கா அமைப்பதன் மூலமாக, தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்த பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும் இங்கு முதலீடு செய்பவர்களுக்கு 100% ஜிஎஸ்டி திருப்பி அளிக்கப்படும் மற்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தவிர, 50 % இந்த முதலீட்டில் மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர், தமிழக ஆட்டோ துறையின் முக்கிய மையமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
