'ஆஹா'.. 'அசத்தலான ரிசல்ட்ஸ்'.. 'மனுஷங்களுக்கு' பாதுகாப்பாக 'கருதப்படும்' கொரோனா 'மருந்தை' தயாரித்த 'நாடு'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Aug 26, 2020 06:59 PM

COVID-19 தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் முனைப்பாக இருந்து வரும் சூழலில், ஆஸ்திரேலியாவில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசி மருந்து, மனித மருத்துவ பரிசோதனைகளில் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளதாக நம்பிக்கை தரும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Australian vaccine provides protection from covid19, safe for humans?

கடந்த ஜூலை மாதம், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலிய பயோடெக் நிறுவனமான சி.எஸ்.எல் ஆகியவை 120 பிரிஸ்பேன் தன்னார்வலர்களைக் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மருந்து பரிசோதனையை தொடங்கியது என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.  முதலில் விலங்குகளுக்கு சோதனை செய்யப்பட்ட பின்னர், இந்த திட்டத்தின் இணைத் தலைவரும் இணை பேராசிரியருமான கீத் சேப்பல் இது வெற்றிகரமாக இருப்பதாக கூறியுள்ளார்.

"மூலக்கூறு கிளாம்ப்" தொழில்நுட்பம் என்று அழைக்கப்படும் இந்த தடுப்பூசி, விலங்கு மாதிரிகளில் நடுநிலையான நோயெதிர்ப்பு மறுவினையை உருவாக்கியுள்ளதாகவும், இது கோவிட் -19 இலிருந்து மீண்ட நோயாளிகளில் காணப்படும் ஆன்டிபாடிகளின் சராசரி அளவை விட சிறந்தது என்றும் டாக்டர் சாப்பல் மேற்கோள் காட்டியுள்ளார்.

இம்மருந்து நெதர்லாந்தில் உள்ள வெள்ளெலிகளுக்கும்,  விலங்குகளுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டபோது, அந்த மருந்து குறிப்பிட்ட நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டியதை காண முடிந்ததாகவும், கொரோனா நோயால் உருவாகும் நுரையீரல் அழற்சியைக் குறைத்ததாகவும், இதனை அடுத்து இந்த தடுப்பூசி பிரயோகப்படுத்தப்பட்ட 120 மனித பங்கேற்பாளர்களில் எவருக்கும் எதிர்மறையான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Australian vaccine provides protection from covid19, safe for humans? | World News.