இலவச ‘வாஷிங் மெஷின்’ திட்டம் அறிவித்தது ஏன்?.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இலவச வாஷிங் மெஷின் திட்டம் அறிவிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தேர்தல் பரப்புரையில் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.
வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் மதுரை கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை ஆதரித்து ஒத்தக்கடையில் முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வியாபாரிகள் அனைவரும் நிம்மதியாக தொழில் செய்யும் மகிழ்ச்சியான ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் கூறினார். மின் துறையில் தனிக்கவனம், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு காரணமாக பெரிய தொழில் நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தைத் தேடி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ஏழை மக்களுக்கு பார்த்து, பார்த்து உயிரோட்டமான பல திட்டங்களை செயல்படுத்துவதாகவும், வீடுகள் தோறும் துணி துவைக்கும் பெண்களின் வேலைப்பளுவை குறைக்கவே இலவச வாஷிங் மெஷின் திட்டம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.