'உலக' தமிழர்களை ஒன்றிணைக்க... 'தமிழக' முதல்வரின் சிறப்பான 'திட்டம்'... வேற லெவலில் குவியும் 'பாராட்டு'க்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கிலுள்ள தமிழர்களையும் உலகெங்கிலுமுள்ள 38 நாடுகளை சேர்ந்த தமிழர்களை மூன்று நாள் Virtual Enclave மூலம் இணைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் யாதும் ஊரே குளோபல் conclave என்ற திட்டத்தினை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் தமிழ்நாடு புலம்பெயர்ந்தோரால் உருவாக்கப்பட்ட நிலையில், இந்த திட்டம் அக்டோபர் 29 முதல் துவங்கப்படவுள்ளது. ATEA இணை நிறுவனர் லீனா கண்ணப்பன் பிரபல பத்திரிக்கையிடம், “அமெரிக்க புலம்பெயர்ந்தோரிடமிருந்து மாநிலத்தில் பெரிய முதலீடுகளைச் செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்திருந்தார்.
தொடக்க சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் அமெரிக்க பங்காளராக இந்த நிகழ்வில் ATEA பங்கேற்கிறது. இந்த மாநாட்டின் கருப்பொருள், "தமிழ் புலம்பெயர்ந்தோருடன் கூட்டணியை மறுவரையறை செய்தல்". இந்நிகழ்ச்சி நாடுகளில் உள்ள தமிழ் சகோதரத்துவ உணர்வைக் கொண்டாடுகிறது.
இதில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச எக்ஸ்போ உள்ளிட்ட பல நிகழ்வுகள் இடம்பெறும். இது தான் யாதும் ஊரே திட்டமாகும். மேலும், இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் ஆர் ஆர்.எம்.அருண், 'நாங்கள் 400 தமிழ் சங்கங்களை அடைந்துள்ளோம். சுமார் 5,000 முதல் 10,000 பிரதிநிதிகள் பங்கேற்பதை எதிர்பார்க்கிறோம். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்' என அருண் தெரிவித்துள்ளார்.