‘தாயும், சேயும் நல்லா இருக்காங்க’!.. முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிறந்த ஆண் குழந்தை.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங். கடந்த 1998-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். சிறந்த சுழற்பந்து வீச்சாளராகத் திகழும் ஹர்பஜன் சிங் டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 269 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார்.
இவர் பிரபல பாலிவுட் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்துகொண்டார். தற்போது திரைத்துறையின் பக்கம் கவனம் செலுத்தி வரும் ஹர்பஜன் சிங், தமிழில் டிக்கிலோனா மற்றும் ப்ரண்ட்ஷிப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஹர்பஜன் சிங்-கீதா பாஸ்ரா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளதாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், தற்போது இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் ஹர்பஜன் சிங்கிற்கு, கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Blessed with a Baby boy 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙 shukar aa Tera maalka 🙏🙏 pic.twitter.com/dqXOUmuRID
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 10, 2021
ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக ஹர்பஜன் சிங் விளையாடியுள்ளார். அப்போது அவர் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக ஹர்பஜன் சிங் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
