முழு ஊரடங்கில் சில ‘தளர்வுகளை’ அறிவித்த தமிழக அரசு.. எதற்கெல்லாம் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது..?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மே 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முழு ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. காய்கறி, பூக்கடைகள் ஆகியவற்றை விற்பனை செய்ய அளிக்கப்பட்ட அனுமதியைப் போன்று, அதே நிபந்தனைகளுடன் பழ வியாபாரமும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
2. அனைத்துத் தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் மேற்கொள்ள அனுமதி.
3. ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் (Continuous Process Industries manufacturing Essential items) இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் ஒரு சேவைமையம் (Helpline) 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும்.
4. ஆங்கில மருந்துக் கடைகள் இயங்க அளிக்கப்பட்ட அனுமதியைப் போல், அதே நிபந்தனைகளுடன் நாட்டு மருந்துக் கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.