வீடு திரும்பியதும் கோலி செஞ்ச ‘முதல்’ வேலை.. ‘நீங்களும் இதை பண்ணுங்க’.. ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா அதிகரிப்பால் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா நன்கொடை வழங்கியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த இரண்டாவது 2-வது அலையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் பெரிய அளவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவிகள் செய்து வருகின்றன. மேலும் இந்தியாவில் உள்ள பலரும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தங்களால் முயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா தம்பதி 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விராட் கோலி கேப்டனாக இருந்து வழி நடத்தி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனால் தொடரை தற்காலிகமாக நிறுத்துவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் அனைத்து வீரர்களும் வீடு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலி நேற்று வீடு திரும்பினார்.
கடந்த 2-ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்த அனுஷ்கா ஷர்மா, தானும் விராட் கோலியும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விராட் கோலி வீடு திரும்பியதும் முதல் வேலையாக மருத்துவ உபகரணங்கள் வாங்க 2 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என ரசிகர்களுக்கு விராட் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்
