"ஏன் பூஜாவுக்கு மட்டும்.?".. DJ பிளாக் பாட்டு போடுவது குறித்து மேடையிலேயே வருத்தப்பட்ட குடும்பத்தினர்.? | SUPER SINGER 9

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Mar 03, 2023 04:06 PM

சென்னை : சீரியல்கள், காமெடி நிகழ்ச்சிகள், ஆடல், பாடல் மற்றும் விவாத நிகழ்ச்சி என பல்சுவை நிகழ்ச்சிகளை பல்வேறு பார்வையாளர்களுக்கு தகுந்தாற்போல் ஒளிபரப்பு செய்யும் விஜய் டிவி, குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பெருவாரியான ரசிகர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது.

super singer 9 pooja relatives comments on DJ Black work

Also Read | விடுதலை - 1 படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா.. எப்போ? வெற்றிமாறன் கொடுத்த  அப்டேட்!

சூப்பர் சிங்கர்

அதிலும் விஜய் டிவி விஜய் டிவியின் அடையாளம் என்று சொல்லும் அளவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும், ஜோடி நம்பர் ஒன் என்கிற நிகழ்ச்சியும் பிரபலமாக இருக்கின்றன. அவ்வகையில் அண்மையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9வது சீசன் தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பிஜே பிளாக். விஜய் டிவியின் நகைச்சுவை, சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

super singer 9 pooja relatives comments on DJ Black work

டிஜே பிளாக்

முன்னதாக ஓ சொல்றியா ஓஓ சொல்றியா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா ஸ்ரீ என்னும் பெண்ணிற்கு பாடல் போட்டு அசத்திய டிஜே பிளாக் வைரலானார். இதன் மூலம் ரோஜா ஸ்ரீயும் வைரலானார்.  இந்நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் பூஜாவிற்கு ரொமான்டிக் பாடல்களையும் பட வசனங்களையும் அவ்வப்போது தட்டிவிடுகிறார் டிஜே பிளாக். இதனால் இந்த நிகழ்ச்சியின் இந்த கலகலப்பான பகுதிகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

super singer 9 pooja relatives comments on DJ Black work

பூஜா உறவினர்கள் கமெண்ட்..

அந்த வகையில் இந்த வார இறுதியிலும் பாடுவதற்காக மேடைக்கு வந்த பூஜா, தமது குடும்பத்தினருடன் வந்து நின்றார். அப்போதும் பூஜாவுக்கு பாடல்கள் வந்தபோது பாடல்களையும் ரொமான்டிக் வசனங்களையும் தட்டி விட்டார் டிஜே பிளாக். ஆனால் இம்முறை பூஜாவின் குடும்பத்தினர்,  “ஏன் பூஜாவுக்கு மட்டும் இப்படி பாடல் போடுகிறீர்கள்?  மிகவும் மனவருத்தமாக இருக்கிறது. இந்த வருத்தத்தை சொல்லாமல் மனதிற்குள்ளேயே வைத்திருப்பது தேவையில்லை” என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

super singer 9 pooja relatives comments on DJ Black work

பூஜாவுக்கு அதிகமாக பாடல் போடுறீங்க

இதற்கு மேடைக்கு வந்து பதில் அளித்த டிஜே பிளாக், “எல்லாருக்கும் போலவே பூஜாவுக்கும் பாடல்களை போடுகிறேன்” என்று கூறுகிறார், ஆனால், “அது பூஜாவுக்கு சற்றே அதிகமாக இருப்பதாகப் படுகிறது” என்று பூஜாவின் தரப்பினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

super singer 9 pooja relatives comments on DJ Black work

இதனால் நடுவர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. ஆனால் இது பிராங்க்காக இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரும் சனி மற்றும் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Also Read | அப்போ ரோஜா ஸ்ரீ.. இப்போ பூஜா.. பாட்டு, டயலாக்னு அமர்க்களம் பண்ணும் DJ பிளாக் | super singer 9

Tags : #VIJAY TELEVISION #SUPER SINGER 9 #ROJA SRI #DJ BLACK #SUPER SINGER POOJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Super singer 9 pooja relatives comments on DJ Black work | Tamil Nadu News.