டிரான்ஸ்ஃபர்-ல் சென்ற ஆசிரியர்கள்.. "போகாதீங்க".. கட்டிக் கொண்டு கதறி அழுத மாணவிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூர் அருகே பணியிட மாறுதல் காரணமாக பள்ளியில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாணவிகள் கட்டிப் பிடித்து கதறி அழுத சம்பவம் பலரையும் நெகிழ வைத்து உள்ளது.

உக்ரைன் மேயரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டு ரஷ்யா வச்ச டிமாண்ட்..முழு விபரம்..!
பணியிட மாறுதல்
வேலூரில் உள்ள கேவி குப்பத்தில் இயங்கி வருகிறது அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி. இந்நிலையில் பணி இட மாறுதல் காரணமாக இந்தப் பள்ளியில் இருந்து 5 ஆசிரியைகள் விலகி வேறு பள்ளிக்கு சென்றுள்ளனர். தங்களுடன் நண்பர்கள் போல பழகிய ஆசிரியைகளை பிரிய மனம் இல்லாமல் அந்தப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் கதறி அழுத சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்து உள்ளது.
கலந்தாய்வு
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த 15.03.2022 அன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்துகொண்ட கேவி குப்பம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 5 ஆசிரியைகளுக்கு பணி இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
பிரிவு உபசார விழா
இந்நிலையில், பணி இட மாறுதலில் செல்லும் 5 ஆசிரியைகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. நேற்று மாலை அந்தப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் சக ஆசிரியைகள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
விழா முடிந்து 5 ஆசிரியைகளும் விடைபெறும் போது சக ஆசிரியர்கள் கண்ணீர் வடித்ததோடு, மாணவிகளும் கட்டித்தழுவி கதறி அழுது ஆசிரியைகளுக்கு பிரியா விடை அளித்தனர்.
கற்றுக்கொடுத்த ஆசிரியைகள் பணி மாறுதலில் சென்றதால் மாணவிகள் மற்றும் சக ஆசிரியையைகள் கதறி அழுத்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
