Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top

குழந்தைகளுக்கு தமிழில் பெயர்.. பெற்றோர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் மா.சுப்ரணியன்.. முழு விபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Sep 30, 2022 11:10 PM

பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் என தமிழக குடும்ப மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

School fees free for children named in Tamil says MP

வளைகாப்பு நிகழ்ச்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் சார்பாக சென்னை சைதாப்பேட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 285 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் இந்த விழாவை துவக்கி வைத்து கர்ப்பிணிகளுக்கு சிறப்பு பொருட்களை வழங்கினர். தடுப்பூசிகளின் முக்கியத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அவசியம் குறித்து இந்த நிகழ்ச்சியின்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள், கண்ணாடி தட்டு அடங்கிய வரிசை தட்டுகள் வழங்கப்பட்டன.

தமிழில் பெயர்

இந்த விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பெருமையாக கருத வேண்டும் எனவும் இது கட்டாய இல்லை என்றும் இதனை வேண்டுகோளாக முன்வைப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"கடந்த திமுக ஆட்சியில் தமிழில் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் கொடுக்கப்பட்டது. இதற்கான பெயர் பட்டியலை பேராசிரியர் நன்னன் தயாரித்து கொடுத்தார். இங்கு கலந்துகொண்ட அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அடுத்த ஆறு மாதத்தில் விழா ஒன்று நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதோடு குழந்தைகளுக்கான முதலாண்டு பள்ளி கல்வி கட்டணமும் செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகளை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள கலைஞர் கணினி கல்வி மையம் மேற்கொள்ளும்" என்றார்.

வேண்டுகோள்

மேலும், விழாவில் கலந்துகொண்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் முடிந்தவுடன் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? என கேட்க இருப்பதாகவும், பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களின் விருப்பம் எனவும் ஆகவே தான் கட்டாயப்படுத்தவில்லை என்றும் இதனை வேண்டுகோளாக முன்வைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதனையடுத்து பேசிய கீதா ஜீவன்," பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. கர்ப்பிணிகள் ஒருநாளைக்கு 5 முறை சாப்பிட வேண்டும். பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் 1098 என்ற எண்ணிற்கு போன் செய்யலாம். உளவியல் ரீதியான சிக்கல்கள் இருக்கும் பெண்களும் இந்த எண்ணினை தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கப்படும்" என்றார்.

Tags : #TAMIL #NAME #M.SUBRAMANIAN #MP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. School fees free for children named in Tamil says MP | Tamil Nadu News.