'தூங்கிட்ருந்த பெண்மணியை...' 'குடிச்சிட்டு கல் எறிந்த இளைஞர்...' டென்ஷன் ஆகி கொதிக்க கொதிக்க சூடு தண்ணிய...' - நைட் 2 மணிக்கு நடந்த பயங்கரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குடிபோதையில் அடுத்தவர் வீட்டு கதவை தட்டி மேலும் மது கேட்டவரின் முகத்தில் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார் சேலத்தை சென்ற பெண் ஒருவர்.
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி பி. நாட்டாமங்கலம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஜனார்த்தனன் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் வேலைக்கு சென்று வரும்போது மது குடிப்பது வழக்கம். ஒரு சில நேரங்களில் குடித்துவிட்டு அடுத்தவர் வீட்டை தட்டுவது போன்ற செயலிலும் ஈடுபடுவார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஜனார்த்தனன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் அதே பகுதியில் குடியிருக்கும் ராதாகிருஷ்ணன் வீட்டின் கதவை தட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.
அதேபோல் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ராதாகிருஷ்ணன் வீட்டின் கதவை தட்டி மேலும் குடிக்க மது கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், ஜனார்த்தனனை விரட்ட முயற்சிக்கையில் ராதாகிருஷ்ணனின் மகள் காவியா மீது கல்லைத் தூக்கிப் போட்டு மதுபானம் கேட்டுள்ளார்.
இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான ராதாகிருஷ்ணனின் மகள் குளிப்பதற்காக வைத்திருந்த வெந்நீரை கொதிக்கக் கொதிக்க எடுத்து வந்து ஜன்னல் வழியாக ஜனார்த்தனன் மீது வீசி உள்ளார்.
இதனால் ஜனார்த்தனின் முகத்தின் மீதும், மார்பின் மீதும் வெந்நீர் பட்டதில் கத்தி கூச்சலிட்டுள்ளார். அலறலை கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ஜனார்த்தனனை சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஜனார்த்தனன் மீது வெந்நீர் ஊற்றிய பெண்ணை கைது செய்து பின் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என அறிவுரை கூறி காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.