எவ்வளவு ட்ரிக்ஸா கோர்த்துவிட்டாரு.. அட்வாண்டேஜ் டாஸ்கில் விசித்ராவுக்கு ஆப்பு வெச்ச காளையன் COOKU WITH COMALI
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.
Image Credit : vijay television
Also Read | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 பவுன் நகைகள், வைரம் மாயம்.. போலீஸில் புகார்! முழு விவரம்
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனதுடன் ஏராளமான திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர்.
Image Credit : vijay television
இதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி 4 ஆவது சீசனில் மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், சிவாங்கி, ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்தனர். இவர்களுடன் பழைய மற்றும் புதிய கோமாளிகளும் கோதாவில் இறங்கியுள்ள சூழலில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி இன்னும் அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது.
Image Credit : vijay television
இந்த நிலையில், குக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷனும் தற்போது நடந்துள்ளது. முன்னதாக, 10 போட்டியாளர்களில் இருந்து கிஷோர் ராஜ்குமார், காளையன் மற்றும் ஷெரின் ஆகியோர் எலிமினேஷன் சுற்றுக்கு சென்றனர். இதனையடுத்து, காளையன் இதிலிருந்து முதல் ஆளாக Save ஆக, இறுதியில் ஷெரின் மற்றும் கிஷோர் ஆகிய இருவரில் ஒருவர் வெளியேறும் சூழல் உருவாகி இருந்தது. கடைசியில், கிஷோர் எலிமினேட் ஆனதாக நடுவர்கள் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் அறிவித்தனர்.
Image Credit : vijay television
இந்நிலையில் அனைவருக்கும் இந்த வாரம் பாரம்பரிய தலைவாழை இலை சமையல் டாஸ்க் அளிக்கப்படுகிறது. இதனிடையே காளையன் அட்வாண்டேஜ் டாஸ்க்கை ஜெயிச்சதால், இந்த வாரம் யாரையேனும் ஒருவரை 10 நிமிடம் சமைக்கவிடாமல் செய்யலாம் என்கிற அட்வாண்டேஜ் அவருக்கு இருக்கிறது. அவர் வெங்கடேஷ் பட்டுடன் சென்று ஒவ்வொரு போட்டியாளராக பார்த்துவிட்டு இறுதியில் நன்றாக சமைக்கக் கூடியவராக குறிப்பிட்டு நடிகை விசித்ராவை தேர்வுசெய்கிறார்.
Image Credit : vijay television
இதனால் நடிகை விசித்ரா 10 நிமிடம் சமைக்க முடியாமல் இருக்கிறார். தன்னை காளையன் இதற்காக தேர்வு செய்ததும் விசித்ரா அதிர்ந்து சிரித்தார். ஆனாலும் விசித்ரா நன்றாக சமைக்க கூடியவர் என்பதால் காளையன் அவரை தேர்வு செய்வதாக சொல்லப்படுகிறது.
Also Read | Pandian Stores : விசேஷ வீட்ல வெச்சு அசிங்கப்படுத்திட்டீங்களே.! மூர்த்தியிடம் கோபத்தில் கத்திய ஜீவா..