“திரும்பி வரேன்னு சொல்லு!”.. ஒருவழியாக 'விடுதலை ஆகும் சசிகலா!'.. 'தேதி விபரத்துடன்' வெளியான 'பரபரப்பு' தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 15, 2020 09:09 AM

சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் சசிகலா. முன்னதாக சசிகலா தனது சிறை தண்டனை காலம் முடியும் முன்பே, ஆகஸ்ட் மாதமே வெளியாகலாம் என வதந்திகள் பரவின.

right to information act: Sasikala Release Date Leaked

இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகவிருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே சமயம் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று ஆர்டிஐ மூலம் தகவல்கள் தெரியவந்துள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆகையால்  ரூ.10 கோடி அபராதத் தொகையை சசிகலா கட்டியே ஆக வேண்டும். ஒருவேளை அபராத தொகையை கட்ட தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்றும் குறிப்பிடப்படுகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Right to information act: Sasikala Release Date Leaked | Tamil Nadu News.