'பேஸ்புக்கில் அரை நிர்வாண வீடியோ'... 'அருகில் இருந்த குழந்தைகள்'... 'ஃபாத்திமா செய்தது என்ன'? ... பின்னணி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சபரிமலை கோயிலுக்குப் பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், ஃபாத்திமா ரஹானா என்கிற பெண் செயற்பாட்டாளர் சபரிமலைக்குச் செல்ல முயன்றார். அது கடும் சர்ச்சையான நிலையில், அவர் சபரிமலைக்குச் செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தும். ஃபாத்திமாவைச் சுற்றி எப்போதும் சர்ச்சை சுழன்று கொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

சமீபத்தில் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை ஃபாத்திமா வெளியிட்டார். 'பாடி அண்டு பாலிடிக்ஸ்' என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில், அரை நிர்வாண நிலையில் ஃபாத்திமா இருக்க அவரின் சிறு வயது மகனும் மகளும் ஃபாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது போல அந்த வீடியோ இருந்தது. அதோடு தன் அம்மாவின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால் மட்டுமே இந்த சமூகம் மாறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் ஃபாத்திமாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேரளாவில் எதிர்ப்பு கிளப்பியது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவராத வகையில் அவர் மீது திருவல்லா போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஃபாத்திமா செய்தது குறித்துப் பேசிய மனநல மருத்துவர் டாக்டர் சி.ஜே. ஜான், ''ஒரு தாய் மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட கலை தொடர்புகளில் எந்தவித ஆபாசமும் இல்லை.
அதே நேரத்தில் இது தனிப்பட்ட நபர் தொடர்புடையதாக இருக்க வேண்டும். ஆனால், அதைப் படமாக்கி பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொதுவெளியில் விடும்போது, வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரியவர் ஒருவர் இரண்டு சிறுவர்களை, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது கூட தெரியாமல் இருக்கும் வயதில் இதுபோன்ற செயலில் ஈடுபட வைப்பது குற்றமாகும்'' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
