'3 நாள்ல ரஷ்யா பெரிய பிரச்சனையை சந்திக்கும்'.. உக்ரைன் ராணுவம் சொன்ன தகவல்..இப்படி ஒரு விஷயம் இருக்கா..?
முகப்பு > செய்திகள் > உலகம்ரஷ்ய ராணுவம் இன்னும் மூன்று நாட்களில் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

"கான்வே வேண்டாம்.. பேசாம ஓப்பனிங் இவரை இறக்கி விடுங்க".. CSK அணிக்கு இர்ஃபான் பதான் அட்வைஸ்..!
போர்
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை குறிவைத்து ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் பாதுகாப்பு படை ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து போர் புரிந்து வருகிறது.
மூன்று நாட்கள்
உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகளிடம் மூன்று நாட்களுக்கு தேவையான வெடி குண்டுகள், வெடி பொருட்கள் மற்றும் எரி பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களே கைவசம் இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உக்ரைன் நாட்டில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகளின் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருள்களே அவர்களிடத்தில் இருக்கிறது. மீண்டும் அவற்றை விநியோகிக்கும் பணியை டேங்க் ட்ரக்குகளே மேற்கொள்கின்றன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்த் தாக்குதல்
கடந்த 24 மணிநேரத்தில் ரஷ்யாவின் ஒன்பது வான் இலக்குகளை தாக்கியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு விமானம் 6 ஆளில்லா விமானம் 2 ஹெலிகாப்டர்கள் அடக்கம். ரஷ்யாவின் 13 தாக்குதல்களை தடுத்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது. இந்த பணியின்போது 14 டேங்கர்கள், 8 தரைப்படை வாகனங்கள், இரண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி வண்டிகள், மூன்று எறிகணை அமைப்புகள் மற்றும் 4 பிற வாகனங்களையும் அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து 23 ஆவது நாளாக நடைபெற்றுவரும் போர் காரணமாக இதுவரையில் 925 உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டதாகவும் 1,496 மக்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரையில் 3 மில்லியன் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய படைகளிடம் 3 நாட்களுக்கு தேவையான எரிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மட்டுமே கைவசம் இருப்பதாக உக்ரைன் ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பது தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
