‘இந்த ரெண்டு பேருக்கும்‘... ‘ஒரு ஒற்றுமை இருக்கு’... ‘தோனியின் சாதனையை சமன் செய்த ரோகித்’... ‘உற்சாகத்தில் மும்பை அணி ரசிகர்கள்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் செய்த சாதனை ஒன்று வியக்க வைத்துள்ளது.
கொரோனா தொற்றால் இந்த ஆண்டு ஐபிஎல் திட்டமிட்டப்படி மார்ச் மாதம் நடைபெறவில்லை. ஊரடங்கு உத்தரவால் ஐபிஎல் போட்டி நடைபெறுவது தடைப்பட்டுக் கொண்டே வந்த நிலையில், ஐக்கிய அமீரகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டி தொடங்கியது.
ரசிகர்கள் இல்லையென்றாலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணியும், சிஎஸ்கே அணியும் ஒரே சாதனை செய்து அசத்தியுள்ளன.
சிஎஸ்கே அணி இதற்கு முன் ஆடிய 10 சீசன்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. இந்த சீசனில் மட்டுமே பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சிஎஸ்கே அணி இழந்தது. இருப்பினும் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, 2010 மற்றும் 2011 ஐபிஎல் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று சாதனை செய்து இருந்தது.
இரண்டு சீசன்களில் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை செய்து இருந்தார் தோனி. 2011-க்குப் பின்னர் எந்த அணியும் தோனியின் அந்த சாதனையை செய்யவில்லை. தற்போது சிஎஸ்கே அணி செய்த அதே சாதனையை செய்து மிரட்டி உள்ளது ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி. 2019 மற்றும் 2020 ஐபிஎல் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.
இது மும்பை அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை என்றபோதிலும், தற்போதுதான் அந்த அணி, அடுத்தடுத்த வருடங்கள் தொடர்ச்சியாக கோப்பையை வென்றுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.