"ஏற்கனவே மேட்ச் தோத்த கடுப்பு.." கோபத்தில் கத்திய ரோஹித்.. அதுவும் யாருகிட்ட தெரியுமா??.. வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், இதுவரை ஆடியுள்ள மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
தேசிய யோகாசனா சாம்பியன்ஷிப் - மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவன யோகா மாணவிகள் சாதனை
முதல் இரு போட்டிகளில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை தழுவிய மும்பை அணி, நேற்று (06.04.2022) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் படு தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் தற்போது 9 ஆவது இடத்தில் உள்ளது.
தொடர் தோல்வி
கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, இருபது ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, 101 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால், மும்பை அணி வெற்றி பெறவும் ஒரு வாய்ப்பு உருவாகி இருந்தது.
கம்மின்ஸ் ஆடிய ருத்ர தாண்டவம்
ஆனால், 7 ஆவது வீரராக களமிறங்கிய பேட் கம்மின்ஸ், 14 பந்துகளில் அரை சதமடித்து சாதனை புரிந்தார். இதனால், நான்கு ஓவர்கள் மீதம் வைத்து, கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதற்கு முந்தைய சில சீசன்களிலும், மும்பை அணி ஆரம்ப லீக் போட்டிகளில் இப்படி தொடர் தோல்விகளை சந்தித்து பின் வெற்றி கண்டிருந்தாலும், இந்த முறை அந்த அணியின் பந்து வீச்சு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
நாங்க எதிர்பார்க்கவே இல்ல
இதனால், இனிவரும் போட்டிகளில், எந்த மாதிரியான மாற்றங்களை உருவாக்கி, வெற்றியை தொடங்க வேண்டும் என்ற திட்டமிடலிலும் மும்பை அணி ஈடுபட்டு வருகிறது. நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பேசிய ரோஹித் ஷர்மா, "கம்மின்ஸ் இப்படி வந்து ஆடுவார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் மிகச் சிறப்பாக ஆடினார். 15 ஆவது ஓவர் வரை போட்டி எங்கள் கையில் தான் இருந்தது. ஆனால், அதன் பிறகு கம்மின்ஸ் அனைத்தையும் மாற்றி விட்டார்" என ரோஹித் தெரிவித்திருந்தார்.
தொடர் தோல்விகளால் விரக்தியில் இருந்த ரோஹித் ஷர்மா, போட்டிக்கு பின்னர் பேசிக் கொண்டிருந்த போது, சற்று கடுப்பாக தான் காணப்பட்டார். இதனிடையே, தன்னிடம் கேள்வி கேட்கும் வர்ணனையாளரின் சத்தம், ரோஹித்திற்கு சரியாக கேட்கவில்லை என தெரிகிறது.
கத்தியபடி பேசிய ரோஹித்
இதனால், அங்கிருந்த ஒருவரிடம் கோபத்துடன் பேசிய ரோஹித், "வால்யூமை அதிகரித்து வையுங்கள்" என கத்தியபடி விரக்தியில் கூறினார். இது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்ட பிறகு, தொடர்ந்து தன்னுடைய வீரர்களிடம் கண்டிப்பாக இருந்து, அணியை அவர் வழிநடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
Angry rohit sharma...#rohitsharma #IPL #ipl22 pic.twitter.com/UYkCHMLknf
— Vishh💥✨ (@_Vishhhhh_) April 6, 2022
அப்பாடா... கூகுள் Map ல வரவிருக்கும் புது ஆப்ஷன்.. இனி டிராவல் இன்னும் ஈஸியா இருக்கும்..