"5000 வருசம் முன் இந்து பெண்களை கடத்திட்டு போயிருக்காங்க".. 'எதிர்நீச்சல் அப்பத்தா' ஞானம் பரபரப்பு பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்எதிர் நீச்சல் சீரியல் நடிகை பாம்பே ஞானம் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் அப்பத்தாவாக நடித்து பிரபலமானவர் நடிகை பாம்பே ஞானம். இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை பாம்பே ஞானம் அளித்துள்ளார். "ஆண்கள் செய்யும் அடக்குமுறை பற்றி கேள்விப்பட்டு இருக்கோம். அதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து உள்ளீர்களா?" என்ற கேள்விக்கு, "சிறுவயதில் இருந்தே பல வருடங்களாக ஊறிப்போனது. மரபியல் ரீதியாக தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. ஆண்களுக்கு சுதந்திரம் அளிப்பார்கள். தொன்று தொட்டு வந்து கொண்டிருக்கும் பழக்கம் இது.
அவர்களை அறியாமல் அவர்கள் மனதுக்குள் உள்ளே இருக்கும் பழக்கம் இது. இன்னும் சொல்லப்போனால் பெண்களை பாதுகாக்கும் வகையிலும் செயல்பட்டு இருக்காங்க. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்து பெண்களை எல்லாம் மங்கோலியர்கள் கடத்திட்டு போய் இருக்காங்க.
அப்போ இந்து பெண்கள் எல்லாம் ஆண்களுக்கு நிகராக தான் இருந்து இருக்காங்க, உடல் & மன வலிமையில். இதனால் பெண்களை பாதுகாக்கும் வகையில் மங்கோலியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது " என பாம்பே ஞானம் பதில் அளித்தார்.