VIDEO: சின்ராசு 'பேசாம'.... வைரலாகும் 'கடலூர்' காவல்துறை வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 29, 2020 08:01 PM

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Cuddalore Police makes a new video for awareness

இந்த உத்தரவை மீறியும் பலர் பைக்குகளில் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள போலீசார் சுற்றி திரிபவர்களை பிடித்து பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கி வந்தனர். மேலும் பல பகுதிகளிலுள்ள போலீசார் வீட்டில் இருப்பதற்கான அத்தியாவசத்தையும் வீடியோக்களாக வெளியிட்டனர்.

இந்நிலையில், தமிழகத்தின் கடலூர் மாவட்ட போலீசார் சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சமீபகாலமாக ட்ரெண்டில் இருக்கும் கானா நாட்டை சேர்ந்த சவப்பெட்டி நடனக்குழுவின் வீடியோவில் வருவதை போல கடலூர் போலீசார்கள் நான்கு பேர் இணைந்து பைக்கில் பயணித்த இளைஞரை தூக்கிக் கொண்டு ஆடுவது போன்று இந்த விழிப்புணர்வு வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

எளிதில் மக்களிடையே சென்றடையும் வழியில் கடலூர் போலீசாரின் வீடியோ உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.