“டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்”.. காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் .!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Nov 28, 2022 04:01 PM

காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டத்தை தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்

Reversal of Diabetes Kauvery hospital new campaign

சென்னை: 27 நவம்பர், 2022:  நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி “டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்” என்ற பெயரில் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கு திறன்மிக்க மேலாண்மைக்கான ஒரு தனித்துவமான முனைப்புத்திட்டத்தை சென்னை, காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இதையொட்டி நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறுவது (“Reversal of Diabetes”) என்ற ஒரு புதிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இச்செயல்திட்டமானது, இரத்த அழுத்தம், பாதங்கள் மீது ஆய்வு, கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, உயிரி-வேதியியல் சோதனைகள், கொழுப்பு பண்பியல்புகள் மற்றும் விழியடி சோதனை ஆகியவற்றின் மீது இலவச பரிசோதனைகளை வழங்குகிறது.  கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறை மீது ஆலோசனை, நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த சமையல் செய்முறை குறிப்புகள் மற்றும் துணை ஊட்டச்சத்து தயாரிப்புகள், இயன்முறை மருத்துவ சிகிச்சை மற்றும் நீரிழிவு பராமரிப்பு மீதான பிற தயாரிப்புகள் ஆகியவை பற்றி விளக்கமாக எடுத்துரைக்கும் அரங்குகளும் இக்கண்காட்சி நிகழ்வில் இடம்பெற்றிருந்தன. 

இதற்கும் கூடுதலாக, நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் என்ற தலைப்பு மீது நிபுணர்களது ஒரு குழு விவாதமும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக நடைபெற்றது.  இதில் நீரிழிவியல் சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், உணவுமுறை நிபுணர், உளவியல் மருத்துவர் மற்றும் ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இடம்பெற்று பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.  ஆய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, உலகளவில் நீரிழிவின் தலைநகரம் என இந்தியா அறியப்படுகிறது.  கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.  நம் நாட்டில் மட்டும் ஏறக்குறைய 77 மில்லியன் நபர்கள் நீரிழிவு பாதிப்புடன் வாழ்கின்றனர்.  உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.  ஏறக்குறைய 43.9 மில்லியன் நபர்கள் அவர்களுக்கு இருக்கும் நீரிழிவு நிலை கண்டறியப்படாமலேயே வாழ்கின்றனர் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.  நம் நாட்டின் வயது வந்த நபர்கள் அளவில் இது ஏறக்குறைய 57% ஆகும். 

“உரிய சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நிலையானது, இதய இரத்தநாள நோய், நரம்பு சேதம், சிறுநீரக சேதம், அல்சைமர் நோய் மற்றும் தீவிர மனச்சோர்வு ஆகிய கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.  நீரிழிவு நிலை ஏற்படும் இடருக்கான காரணிகளுள், அதிக உடற்பருமன் மற்றும் உடலுழைப்பு இல்லாமை மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மரபியல் அம்சங்கள், வயது மற்றும் குடும்பத்தில் இந்நோய் இருந்திருக்கின்ற வரலாறு ஆகியவை உள்ளடங்கும்.  நன்கு அறியப்பட்டுள்ள காரணங்களாக இவைகள் இருப்பினும், பெரும்பாலான மக்களால் அலட்சியம் செய்யப்படும் அம்சங்களாக இவைகள் இருக்கின்றன.  இந்த ஆண்டு நடத்தப்படும் டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ் கண்காட்சி வழியாக நோய்களின் இடர்களை அடையாளம் காண்பது மற்றும் திறம்பட அவைகளை சிகிச்சையின் மூலம் நிர்வகிப்பது என மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து கற்பிப்பதே எங்களது நோக்கமாகும்.  நீரிழிவு மேலாண்மையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களின் காரணமாக, நீரிழிவு நிலையிலிருந்து, நீரிழிவு இல்லாத நிலைக்கு மாறுவது சாத்தியமாகியிருக்கிறது. 

எனவே, இதை வலியுறுத்தி மக்களின் கவனத்தை ஈர்க்க நாங்கள் விரும்பினோம்.  சரியான தகவலறிவு மற்றும் வழிகாட்டல் மூலம் நீரிழிவை திறம்பட நிர்வகிப்பதற்கு இச்செயல்திட்டத்தை மக்கள் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் இதன் மூலம் நீரிழிவு பாதிப்பை மாற்றி, நீரிழிவு இல்லாத நிலையை எட்டமுடியும். இக்கண்காட்சி நிகழ்வு, பொதுமக்களுக்கு பயனளித்திருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்.  நீரிழிவை சமாளிக்கவும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மக்கள் மேற்கொள்ளும் பயணத்தில் அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.” என்று சென்னை, காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர். K.பரணிதரன் கூறினார்.

Reversal of Diabetes Kauvery hospital new campaign

தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “அதிவேகமாக மாறி வரும் உலகில் உடல்நல சிகிச்சைப் பராமரிப்பில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது; நீரிழிவு மேலாண்மையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு கணிசமாக இருக்கிறது.  தொடர்ச்சியான குளுக்கோஸ் அளவு கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பம் இப்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.  நீரிழிவு நோயாளியின் கையில் ஒரு சிறிய அளவிலான பேட்ச் இணைக்கப்படுகிறது; இது, நாள் முழுவதும் நோயாளியின் இரத்த சர்க்கரை அளவுகளை அளவிடுவதற்கு உதவுகிறது.  இந்த வழிமுறையினால் நீரிழிவு நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சை வழங்கப்படுவது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது. நீரிழிவு மேலாண்மையில் இத்தகைய நவீன, மேம்பட்ட தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்துவதற்காக காவேரி மருத்துவமனையை நான் மனமார பாராட்டுகிறேன்.  வழங்கப்படும் சிகிச்சை துல்லியமாக இருப்பதால், மருத்துவர் மற்றும் நோயாளி ஆகிய இருதரப்பினருக்கும் இது நம்பிக்கையை வழங்குகிறது.  நீரிழிவு மேலாண்மை மற்றும் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் ஆகியவை மீது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்கி விழிப்புணர்வு பெறச் செய்வதற்கான குறிக்கோளுடன் இதனை அறிமுகம் செய்திருக்கின்ற காவேரி மருத்துவமனையை நான் பாராட்டி மகிழ்கிறேன்.” என்று கூறினார்.

Tags : #KAUVERY HOSPITAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Reversal of Diabetes Kauvery hospital new campaign | Tamil Nadu News.