சென்னை: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக காவேரி மருத்துவமனையின் ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி’..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னணி மருத்துவமனையான காவேரி மருத்துவமனை சார்பில் சென்னையில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியின் டிராபி வெளியீட்டு விழாநடைபெற்றது.

சென்னை : மார்பக புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முன்னணி மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, சென்னையில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியினை முன்னெடுத்தது.
இந்த கிரிக்கெட் போட்டியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் அணிகள் பங்கேற்றன. மேற்படி இந்த போட்டிகள் சென்னை ஒய்.எம்.சி.ஏ மற்றும் செயின்ட் பேட்ஸில் அக்டோபர் 13, அக்டோபர் 14 மற்றும் அக்டோபர் 15 ஆகிய தேதிகளிலும், இதன் இறுதிப் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும் நடைபெறும் என்றும், போட்டியின் வெற்றியார்களுக்கு டிராபி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இதன் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது, இதேபோல், போட்டி நடைபெறும் இந்த மூன்று நாட்களும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்பக புற்றுநோய்க்கான இலவச ஸ்கிரீனிங், ஒரு நடமாடும் மேமோகிராம் வேன் மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
