“எதாவது சாதிக்கணும்னு BIGG BOSS வந்தேன்.. ஆனா ஒரே ஒருத்தங்களையே பார்த்துட்டு இருந்துட்டேன்” - ராபர்ட் மாஸ்டர் அல்டிமேட் FUN
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று நடைபெற்று வந்த தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சயின் 6 ஆவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடந்து முடிந்தது.

Also Read | “மாஸ்டர்னாலே கண்டம்..” .. டிவி நிகழ்ச்சியில் பொசுக்குனு சொன்ன ரச்சிதா.!.. 😅
சுமார் 106 நாட்கள் நடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலகலப்பு, சண்டை, வாக்குவாதங்கள், எமோஷனல் என அனைத்தும் நிறைந்து விறுவிறுப்புடன் சென்றதால் பார்வையாளர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பேச்சு அதிகம் பரவலாக சமூக வலைத்தளங்களில் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் வெளியே சென்றாலும் மக்கள் அனைவரும் அமோகமான வரவேற்பு கொடுத்ததும் வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரையும் வைத்து பிக் பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி வார இறுதியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இறுதியில் கலந்துகொண்ட பிக்பாஸ் 6வது சீசன் போட்டியாளர்கள் குழந்தைகள் போல் பேச, டிஎஸ்கே இவர்களை கலகலப்பாக கேள்விகளை கேட்டார்.
முன்னதாக தனக்கு தண்ணியில கண்டம், பிக்பாஸ் என்றால் கண்டம், மாஸ்டர் என்றால் கண்டம் என ரச்சிதா குழந்தை போல் கூற, அதன் பிறகு தனது ப்ளஸ் & மைனஸை குழந்தைகள் போலவே ராபர்ட் மாஸ்டர் கூறினார். அதில், “நான் பிக்பாஸ்க்குள்ள வந்து எதாவது ப்ரூஃப் பண்ணனும்னு சொல்லி எல்லாரையும் பாத்துட்டு இருந்தேன். ஆனா எல்லாரையும் பார்க்காம ஒரே ஒருத்தங்கள பாத்து சொதப்பு சொதப்புனு சொதப்பிட்டேன்” என மழலைகள் போலவே Fun ஆக பேசினார்.
Also Read | “அந்த Aunty-க்கு சிறு நீர் பார்சல்..” .. மாறி மாறி கலாய்த்த ரச்சு - பிரியங்கா! bigg boss kondattam

மற்ற செய்திகள்
