‘தலை, கழுத்தில் காயம்’.. மனைவியின் மரண வழக்கில் 3-வது கணவர் பரபரப்பு வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியின் மர்ம மரண வழக்கில் மூன்றாவது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Also Read | “இந்த மாதிரி மேட்சுக்கெல்லாம் எனக்கு அதிக சம்பளம் தரணும்”.. எதுக்காக KL ராகுல் இப்படி சொன்னார்..?
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் அடுத்த ராஜீவ் காலனியை சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் கடந்த 14-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து வந்த போலீசார் காளீஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த காளீஸ்வரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் காயம் இருந்ததால், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சிவகாசி ஜமீன்சல்வார் பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்த காளிஸ்வரிக்கு தான் 3-வது கணவர் என்றும், அவர் தனக்கு 2-வது மனைவி என்றும் லட்சுமணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், காளீஸ்வரி பல நபர்களுடன் போனில் பேசியதால் அவரை கண்டித்ததாக லட்சுமணன் கூறியுள்ளார். ஆனால் காளீஸ்வரி தொடர்ந்து போனில் பேசி வந்ததால் ஆத்திரத்தில் அவரை தாக்கியதில், அவர் இறந்துவிட்டதாக போலீசாரிடம் லட்சுமணன் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
