BREAKING: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருக்கு 1 ஆண்டு சிறை.. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | May 19, 2022 03:43 PM

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து-விற்கு ஒரு ஆண்டுகால சிறை தண்டனை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Navjot Sidhu Gets 1 Year In Jail In 34 Year Old Road Rage Case

Also Read | மொத்த வாழ்க்கையும் இவ்வளவுதாங்க..ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச போட்டோ.. ரொம்ப சிம்பிளா சொல்லிட்டாரே..!

நவ்ஜோத் சிங் சித்து

1963 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி பிறந்த நவ்ஜோத் சிங் சித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆவார். 51 டெஸ்ட் போட்டிகளிலும், 136 ஒருநாள் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார். 1983 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட துவங்கிய சித்துவை சிக்ஸர் சித்து என அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். கடந்த 1988 ஆம் ஆண்டு ஒருவரை கொலை செய்ததாக சித்து மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

Navjot Sidhu Gets 1 Year In Jail In 34 Year Old Road Rage Case

வழக்கு

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி, குர்னாம் சிங் என்பவரை சித்து தாக்கியதன் காரணமாக அவர் உயிரிழந்தாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக செப்டம்பர் 22, 1999 அன்று பாட்டியாலாவின் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, சித்துவையும் அவரது நண்பரையும் ஆதாரம் இல்லாத மற்றும் சந்தேகத்தின் பலனைக் காரணம் காட்டி விடுதலை செய்தார்.

இதனையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சித்துவிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், சித்து இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதன்பிறகு தண்டனையை குறைக்கும்படியும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார் சித்து.

Navjot Sidhu Gets 1 Year In Jail In 34 Year Old Road Rage Case

தண்டனை

கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Navjot Sidhu Gets 1 Year In Jail In 34 Year Old Road Rage Case

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, 34 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில் ஓராண்டு கால சிறைத் தண்டனை பெற்றிருப்பது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

Tags : #NAVJOT SIDHU #ROAD RAGE CASE #உச்ச நீதிமன்றம் #நவ்ஜோத் சிங்

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Navjot Sidhu Gets 1 Year In Jail In 34 Year Old Road Rage Case | India News.