“தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் அதிரடி தீர்ப்பு”!...முழு விவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 06, 2019 06:27 PM

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு தள்ளுபடி செய்துள்ளது.

inquiry committee dismissed the sexual harassment case against CJI

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து, இந்த புகார் குறித்து விசாரிக்க மூத்த நீதிபதி பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட குழுவை தலைமை நீதிபதி அமைத்து உத்தரவிட்டார். மேலும் இக்குழு ரகசியமாக விசாரணை நடத்தும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி பாப்டே தலைமையிலான விசாரணைக் குழு, இந்த பாலியல் புகாருக்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில், உள்விசாரணைக் குழு நடத்திய விசாரணையின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என்று கூறினர். மேலும், புகார் அளித்த பெண் விசாரணையில் விலகியுள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ததாக கூறியுள்ளனர்.

Tags : #RANJAN GOGAI #CJI #CASE #DISMISSED #SEXUAL HARRASSMENT