வாத்தி ரைடு... பள்ளி வாகனங்களில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி ஆய்வு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான வாகனங்களை இன்று அதிரடியாக சோதனையிட்டார்.

14 வருஷமா வீட்டுக்கு போகாம ஏர்போர்ட்லயே தங்கியுள்ள நபர்.. இதுக்கா இப்படி ஒரு முடிவு..?
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். அதிரடிக்கு பெயர் போன இவர் இன்று மதுரையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார்.
சென்னையில் நடந்த சோகம்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி மாணவர் ஒருவர் ஸ்கூல் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அடுத்து காவல்துறை அந்த வேன் ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களுக்கான விதிமுறைகளை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது.
ஆறுதல்
பள்ளி மாணவர் ஸ்கூல் வேன் மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு போன் மூலமாக ஆறுதல் தெரிவித்து உள்ளார். அப்போது இந்த குற்றத்திற்கு காரணமானவர்களின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆய்வு
இதனிடையே மதுரை விரகனூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு இன்று சென்றிருக்கிறார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வாகனங்களில் ஏறி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களுக்கான பதிவேட்டை சோதனையிட்ட அவர் வேன் ஓட்டுனர்கள் மற்றும் துறைசார் பணியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அதிரடி ஆய்வு நடத்தியது தற்போது தமிழகம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
