'அம்மா, அப்பாவ பத்திரமா பார்த்துக்கோ...' 'திருமணம் ஆகாததால் விரக்தியடைந்த டாக்டர்...' மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்குரோம்பேட்டை மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரியும் சென்னையை சேர்ந்த இளைஞர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருகம்பாக்கத்தைச் சேர்ந்த மல்லிகா அர்ஜூன் (35) என்னும் இளைஞர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
அர்ஜுனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடக்கவில்லை இதனால் அவர்களின் குடும்பத்தில் அவ்வப்போது சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாட்களாகவே மனம் உடைந்து காணப்பட்ட அர்ஜுன் நேற்று மாலை ஒரு அசம்பாவித செயலை செய்துள்ளார்.
நேற்று மாலை சுமார் 3 மணியளவில் தனது காரில் மெரினா கடற்கரைக்கு வந்து கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்தியுள்ளார் மருத்துவர் அர்ஜுன். தான் இறப்பதற்கு முன்பு தனது சகோதரருக்கு வாட்ஸ்அப் மூலம் தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனை ஷேர் செய்துள்ளார். மேலும், எனது இந்த முடிவுக்கு யாரும் காரணமல்ல, அப்பா அம்மாவை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும் என மெசேஜ் செய்துள்ளார்.
அதன் பின் மாலை 7 மணியளவில், அர்ஜுனின் உடல் சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கியது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து மெரினா காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை மீட்ட போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
அர்ஜுனின் இந்த தற்கொலை சம்பவம் அவரின் குடும்பத்தாரை நிலைகுலைய வைத்துள்ளது. மேலும் போலீசார் அவரின் குடும்பத்தினரையும் விசாரணை செய்து வருகின்றனர்.
