'இந்த மாதிரி' பண்ணிட்டு இருந்தீங்கனா போலிச கூப்டுவேன்...! 'சடசடவென பூட்டிக்கொண்ட கதவுகள்...' என்ன நடந்தது...? - கடைசியில் தெரிய வந்த உண்மை...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jun 08, 2021 12:42 PM

கோயம்பத்தூரில் மசகாளிபாளையம் அம்மா உணவகத்துக்கு எதிரே உள்ள முல்லை நகரில் வசித்துவருபவர் மணிகண்டன்.

Coimbatore mentally ill person Riots in homes people affraid

மணிகண்டன் ஒருசில நேரங்களில் குடிபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் தகராறு செய்வதும், அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தியும் வந்துள்ளார்.

இதேபோல் கடந்த திங்கட்கிழமையும் வீட்டாருக்கில் இருப்போரிடம் தகராறு செய்துள்ளார். இதை தாங்க முடியாத அவரது வீட்டுக்கு எதிரே உள்ளவர்கள், மணிகண்டனை தட்டி கேட்ட பொழுது கற்களைக் கொண்டு கேட்டை உடைத்துக் கொண்டு தாக்க முயற்சி செய்துள்ளார்.

இப்படியே பண்ணிகொண்டிருந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுப்பேன் என அங்கிருந்த இளைஞர் ஒருவர் எச்சரித்ததும் கையில் கத்தியை எடுத்து வந்து அவரை குத்த முயன்றுள்ளார்.

மணிகண்டனின் இந்த அட்டகாசத்தால் அப்பகுதியே சில மணி நேரம் ஸ்தம்பித்து பார்த்து பயந்து வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டனை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரனையில் மணிகண்டன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது

அதோடு அந்த பகுதியில் வசிப்பவர்களை மட்டுமல்லாது, கடந்த ஒரு வார காலமாக வீட்டில் தாய் தந்தையரை அடித்து ரகளை செய்து கொண்டு இருந்ததாகவும், அதன் பாதிப்பில் மற்ற தாக்குதலில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் போலீசார் மணிகண்டனை சமாதானப்படுத்தி நீலாம்பூரிலுள்ள மனநல மருத்துவமனையான தென்றல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coimbatore mentally ill person Riots in homes people affraid | Tamil Nadu News.