"ஒழுங்கா வரதட்சணை காச குடு"ன்னு... டார்ச்சர் பண்ண கணவர்... கடைசியா ஃபேஸ்புக்'ல பொண்டாட்டியோட... 'கணவர்' செய்த பகிரங்க 'செயல்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Aug 13, 2020 04:31 PM

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் விஜயபாரதி. 2015 ஆம் ஆண்டு முதல் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், அயனாவரம் பகுதியில் வாடகை வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

chennai husband uploads picture of his wife on dowry harassement

இந்நிலையில், விஜயபாரதி அவரது மனைவியிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கொடுக்கும் படி, தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், வரதட்சணை தரவில்லை என்றால், ஆபாச படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அவரது மனைவி கோபமடைந்து விட்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அது மட்டுமில்லாமல் கணவர் விஜயபாரதி மீது மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விஜயபாரதியை விசாரணைக்கு அழைத்த போது இ பாஸ் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியின் ஆபாச புகைப்படத்தை விஜயபாரதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த அவரது மனைவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவரின் இந்த பகிரங்க செயல், மனைவியின் குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai husband uploads picture of his wife on dowry harassement | Tamil Nadu News.