'லவ் பண்றேன்னு கூப்பிட்டு போய்...' 'நம்பி போன சிறுமியை...' 'சின்னாபின்னமாக்கிய இளைஞர்...' - சென்னையில் நடந்த கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் திருமண ஆசை காட்டி பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் 21 வயதான தேவ அருள் என்னும் இளைஞர். இவர் அதே பகுதியை சேர்ந்த இர்பான் அவர்களுடைய 17 வயது மகளை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜூலை 25-ம் தேதி முதல் 17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார்.
நண்பர்கள் உறவினர்கள் வீடு என எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் 28-ம் தேதி புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்ட போது, சிறுமியை காதலித்து வந்த தேவஅருள், பெற்றோர்கள் நம் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மாட்டர்கள் நாம் எங்காவது சென்று திருமணம் செய்து வாழலாம் என ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.
அதையடுத்து தேவஅருள் தலைமறைவாகி இருந்த இடத்தை கண்டறிந்த காவல்துறையினர், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர் மேலும் தேவஅருள் தன்னை பலவந்தமாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி கூறியுள்ளார்.
இதையடுத்து தேவஅருள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த புளியந்தோப்பு மகளிர் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மற்ற செய்திகள்
