'சென்னையில் பாதிப்பு குறைய என்ன காரணம்?'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நாளொன்றுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ள நிலையிலும், பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி அதிகபட்சமாக 2,393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 8ஆம் தேதி நிலவரப்படி, ஒரேநாளில் 14,027 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 986 பேருக்கு மட்டுமே அதாவது 7 சதவீதம் பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகளை அதிகரித்ததன் காரணமாக சென்னையில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள மாநகராட்சி அதிகாரிகள், "இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 1,08,124 பேரில், 94,100 பேர் (87%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 11,734 பேர் (11%) சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை சிகிச்சை பலனின்றி 2,290 பேர் (2.12%) உயிரிழந்துள்ளனர். இதுவரை ரூ 200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டு 7 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை இம்மாத இறுதிக்குள் 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற இலக்கோடு தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்" எனக் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்
