'1998ம் வருடம் 377 கருப்பின பங்குதாரர்கள் இருந்தாங்க!'.. 'உலகின் புகழ்பெற்ற 'உணவகத்துக்கு' எழுந்த புது சிக்கல்?.. பரபரப்பை கிளப்பியிருக்கும் வழக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Sep 01, 2020 08:19 PM

உலகில் பல மில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் பிரபலமான செயின் ரெஸ்டாரண்ட்களில் ஒன்றான மெக்டொனால்ட்ஸ் இந்த உணவு நிறுவனம் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.

case against McDonald over black people share

அமெரிக்காவில் சிகாகோவை தலைமையிடமாகக் கொண்ட மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்திற்கு,  உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. தனியார் பங்குதாரர்களும் உள்ள இந்த நிறுவனத்தின் அமெரிக்க கிளைகள் மட்டும் 14,400 உள்ளன. இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு  1,600 பங்குதாரர்கள் இந்த 20 ஆண்டுகளில் அதிக லாபம் ஈட்டியுள்ளனர்.

அதே சமயம் 1998ம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது அமெரிக்க கருப்பின பங்குதாரர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக, வழக்கறிஞர் ஒருவர் மெக்டோனல்சுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.  எனினும் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மனுதாரரின் தரப்பில், கடந்த 1998ம் வருடம் 377 கருப்பின தொழிலதிபர்கள் பங்குதாரர்களாக இருந்ததாகவும், தற்போது 186 கருப்பின தொழிலதிபர்கள் மட்டுமே பங்குதாரர்களாக இருப்பது  இனப்பாகுபாடு காட்டுவதாகவும், இதனால் அந்நிறுவனம் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஜார்ஜ் ப்ளாயிட் படுகொலையை அடுத்து மீண்டும் கருப்பின மக்கள் ஒடுக்கத்துக்கு எதிரான எதிர்ப்பை காட்டி வரும் சூழலில், வெள்ளைக்காரர்களால் நடத்தப்படும் அமெரிக்க தனியார் நிறுவனங்களும் இந்த சர்ச்சைகளுக்குள் சிக்கத் தொடங்குவது பேசுபொருளாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Case against McDonald over black people share | Tamil Nadu News.