மகனுடைய நிச்சயதார்த்தம்.. குடும்பத்தினருடன் நடனமாடிய அம்பானி.. சர்ப்ரைஸான விருந்தினர்கள்..வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 21, 2023 01:20 PM

உலக பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தினருடன் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Mukesh Ambani Dance with Family Flash At Son Engagement

முகேஷ் அம்பானியுடைய ரிலையன்ஸ் குழுமத்தில் எரிசக்தி துறையை தற்போது ஆனந்த் அம்பானி கவனித்து வருகிறார். சமீபத்தில் முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் முக்கிய பொறுப்புகள் முகேஷ் அம்பானியின் மகன்கள் மற்றும் மகளுக்கு  அளிக்கப்பட்டன. இந்நிலையில், ஆனந்த் அம்பானிக்கும்  ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்ட். மும்பையில் பள்ளிக் கல்வியை முடித்த ராதிகா, அமெரிக்காவின் நியூயார்க்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு பட்டப் படிப்பை முடித்தார். அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அவர் பின்னர் தனது தந்தையுடன் இணைந்து பணியாற்ற துவங்கினார். இந்நிலையில், தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார் ராதிகா மெர்ச்சண்ட்.

இந்நிலையில் மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் குஜராத் வழக்கப்படி திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது, அம்பானி தனது குடும்பத்தினருடன் மேடையில் ஏறி நடனமாடினார். இதனால் அங்கு திரண்டிருந்த பிரபலங்கள் அனைவரும் சர்ப்ரைஸ் ஆகினர்.

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி, மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஷ்லோகா மேத்தா மற்றும் மகள் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர் மேடையில் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

Tags : #MUKESH AMBANI #ANANT AMBANI #ENGAGEMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mukesh Ambani Dance with Family Flash At Son Engagement | India News.