'எங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்'... 'பையனுக்கு பெயரும் வச்சாச்சு'... கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்த தயாநிதி அழகிரி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | May 28, 2021 07:16 PM

தனக்கு மகன் பிறந்திருக்கும் விஷயத்தைப் புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் தயாநிதி அழகிரி.

Dhayanidhi alagiri shares his new born baby picture

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மூத்த மகன் அழகிரியின் மகன் தான் தயாநிதி அழகிரி. இவர் இயக்குநர் சி.எஸ்.அமுதனின் தமிழ்ப்படத்தின் மூலம் இளம் தயாரிப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்தார். அதற்கடுத்ததாக, மதுரை பின்னணியைக் கொண்ட தூங்கா நகரம், அஜித்தின் மெகா ஹிட் படமான மங்காத்தா என தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்துள்ளார்.

Dhayanidhi alagiri shares his new born baby picture

திரைத்துறை மட்டுமல்லாது தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் மதுரை ’சூப்பர் ஜெய்ன்ட்’ அணியின் உரிமையாளராகவும் இருந்து கிராமப்புற கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்புகளையும் கொடுத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்தார். இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது அண்ணனான அழகிரிக்கும் மனக்கசப்பு இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில் அழகிரி, எனது தம்பிக்கு வாழ்த்துக்கள் என ட்விட்டரில் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட விழாவில், தயாநிதி அழகிரி, அவரது சகோதரி கயல்விழி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது உதயநிதி ஸ்டாலின், தயாநிதி அழகிரியைக் கட்டித்தழுவி வரவேற்றார். அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது.

Dhayanidhi alagiri shares his new born baby picture

இதற்கிடையே தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷா தயாநிதி. இவர்களுக்கு ருத்ர தேவ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் தற்போது இரண்டாவது குழந்தையாக மீண்டும் மகன் பிறந்த விஷயத்தை ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் தயாநிதி. மனைவி குழந்தையுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, குழந்தைக்கு வேதாந்த் ஏ தயாநிதி எனப் பெயரிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhayanidhi alagiri shares his new born baby picture | Tamil Nadu News.