“லலிதாவின் ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி உருவான கதை இதுதாங்க” ― மனம் திறந்த BH அப்துல் அமீது.! EXCLUSIVE
முகப்பு > செய்திகள் > தமிழகம்90களில் பிறந்தவர்களுக்கு மறக்க முடியாத நாஸ்டால்ஜியா பலவற்றிலும் முக்கியமானவர் லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு என்று ஞாயிற்றுக்கிழமை ஆனால் சன் டிவியில் நடக்கும் பாட்டுப் போட்டி நிகழ்ச்சியை நடத்தும் அப்துல் ஹமீத்.
![90S Lalitha pattukku pattu program BH Abdul Hameed 90S Lalitha pattukku pattu program BH Abdul Hameed](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/90s-lalitha-pattukku-pattu-program-bh-abdul-hameed.jpeg)
Also Read | "தமிழ்நாடு வாழ்க".. மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசன் 5 மொழிகளில் ட்வீட்! TRENDING
“லலிதாவின் பாட்டுக்கு பாட்டு .. தெ என்ற இடத்தில் மணி ஒலித்து இருக்கிறது.. நீங்கள் ஆரம்பிக்க வேண்டியது தே நெடில் அல்ல தெ குறில்” என்று தொடங்கும் இவரது பேச்சு இன்றும் பலரது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளத்துக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்த இவர் பல்வேறு சுவாரஸ்ய மற்றும் தமக்கு நடந்த அதிர்ச்சிகரமான பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
குறிப்பாக ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சி பற்றி கேட்டபோது பேசிய அவர், “1978ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஏசியா பைக் என்கிற சைக்கிள் நிறுவனத்திற்காக பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை வானொலியில் மூன்று மாதங்களாக நடத்தினோம். அதன்பிறகு உதயா ஜூவல்லர்ஸ் என்கிற நகை கடைக்காக இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த, பிறகுதான் சன் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை ஆதரித்தார்கள்.
அந்த சமயத்தில் கந்தசாமி என்பவர் இலங்கையில் லலிதா ஜுவல்லர்ஸ் என்கிற தன்னுடைய நிறுவனத்தை ஆரம்பித்தார். 1983ஆம் ஆண்டு நடந்த கலவரத்துக்குப் பிறகு இங்கு வந்து சென்னை தியாகராய நகரில் தம்முடைய லலிதா ஜூவல்லர்ஸ் புதிய நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்துக்கு மிகப் பெரிய வெளிச்சம் தந்த நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி என்று அவர்களே பல சமயம் நன்றியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சிக்காக கேட்டபோது, வானொலி நிகழ்ச்சியின் தன்மை மாறாமல் அதே நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டால் மட்டுமே நான் தொடங்குவேன் என்று குறிப்பிட்டு இருந்தேன். ஏனென்றால் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சிக்கு பொருத்தமான ஒரு நிகழ்ச்சியா என்பதில் எனக்கு தயக்கம் இருந்தது. சன் டிவிக்கு பிறகு, கலைஞர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தது. அதன்பிறகு லலிதா ஜூவல்லரி நிறுவனர் கந்தசாமி அவர்கள் காலமானார்கள். பிறகு லலிதா ஜூவல்லரியை நிர்வகித்து வந்தவர் சுகுமார், அவர் கி.ஆ.பெ விசுவநாதம் அவர்களின் பெருமைக்குரிய பேரன்.
அதன்பிறகு லலிதா ஜூவல்லரியில் நிர்வாக மாற்றம் ஏற்பட்டது. பிறகு கிரண் என்கிற நெல்லூரில் இருந்து வந்த ஒருவர் மிக மிக வெற்றிகரமான நிறுவனமாக அதை பல தளங்களுக்கு எடுத்துச் சென்றார். அது அவருடைய அசாத்தியமான திறமை என்று சொல்லலாம். அவர் ‘பாட்டுக்கு பாட்டு’ நிகழ்ச்சியின் தீவிர அபிமானி. அவர் சன் டிவியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தன் குடும்பத்துடன் வந்து முதல் வரிசையில் அமர்ந்து பார்த்து சிறப்பிப்பார்.
ஒரு வர்த்தகத்துறையை நவீன ரசனைகளுக்கு ஏற்ப அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் அவருடைய உத்தி, அதுமட்டுமின்றி ஒரு நிறுவனத்தை விளம்பரப் படுத்துவதற்கு அந்த நிறுவனத்தின் உரிமையாளரே விளம்பரத்தில் நடிக்கும் உத்தி, அது திரு.வசந்த் (வசந்த் & கோ) அவர்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்டது, அவரை அடுத்து தற்போது எல்லா இடங்களிலும் கிரணின் முகம்தான் தெரிகிறது. அவரது முகமே லலிதா ஜூவல்லரயின் முகமாக தெரிகிறது. ” என தம் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
Also Read | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)