டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்... அஜித் ரசிகர்கள் செய்த குறும்பு!.. உலக அளவில் கவனத்தை ஈர்த்த சம்பவம்!.. விரைவில் குட் நியூஸ்!?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அஜித் ரசிகர்கள் செய்த சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
![wtc final ind vs nz valimai update ajith fans england viral wtc final ind vs nz valimai update ajith fans england viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/wtc-final-ind-vs-nz-valimai-update-ajith-fans-england-viral.jpg)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் 3 நாள் ஆட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களை எடுத்தார். அதன் பிறகு களமிறங்கிய நியூசிலாந்து சிறப்பான தொடக்கம் பெற்று விளையாடி வருகிறது. தொடக்க வீரர்கள் டாம் லாதம் - டேவன் கான்வே ஜோடி முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் எடுத்தனர்.
இந்நிலையில், இந்த போட்டியின் போது சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. மைதானத்தில் இருந்த அஜித் ரசிகர்கள் சிலர், நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கும் வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு பதாகை ஒன்றை கையில் வைத்திருந்தனர். இதனை பார்த்த நியூசிலாந்து ரசிகர்கள் எதுவும் புரியாமல் குழம்பினர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்தநாளான கடந்த மே 1ம் தேதியே வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பொதுமக்கள் அவதியுற்று வரும் கொரோனா காலக்கட்டத்தில் அஜித்தின் பிறந்தநாளும் கொண்டாடப்பட வேண்டாம், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையே, நடிகர் அஜித்தின் உதவியாளர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் வலிமை குறித்து அப்டேட் வெளியிட்டார். அதில் சண்டை காட்சிகள் எடுக்கப்பட வேண்டும். ஊரடங்கு தளர்வுகள் கொடுக்கப்பட்ட பின்னர் அவை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். எனினும், வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கேட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பதாகை வைக்கப்பட்டதால், வலிமை திரைப்படம் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)