ஐபிஎல் நட்சத்திர பேட்ஸ்மேன் மிஸ்ஸிங்..! வெளியான உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியல்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 25, 2019 12:53 AM

உலகக் கோப்பையில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பட்டியலை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

World Cup 2019: West Indies squad announced

ஒருநாள் கிரிக்கெட்டுக்கான உலகக்கோப்பை  தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி இங்கிலாந்தில் துவங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை அறிவித்ததுள்ளது.

இதில், ஜேசன் ஹோல்டர் தலைமையில்  பிராவோ, பிதாத்வொய்ட் மற்றும் க்ரிஸ் கெய்ல் போன்ற சீனியர் வீரர்கள் பலரும், ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் நிக்கோலஸ் பூரான் போன்ற பலரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்ட் இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விபரம்:

Tags : #ICCWORLDCUP2019 #ICCWORLDCUP #WESTINDIES #WORLDCUPSQUAD #CWC19