“சவுண்டு ஓவரா இருக்குல..?” .. “சீட் பெல்ட் போடுங்க.. ப்ளேனும் ஹெலிகாப்டரும் டேக் ஆஃப் ஆகப்போகுது”.. தெறிக்கவிடும் “தல” தோனி.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Siva Sankar | Mar 10, 2020 11:23 AM

வரும் மார்ச் 29-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் திருவிழா அமையக்கூடிய இந்தத் தொடர், தோனி ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டமாகவும் அமையவுள்ளது. ஏனெனில் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு போட்டியில் கூட விளையாடாத தோனி நேராக ஐபிஎல் போட்டியில் களமிறங்குவது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

what goes on inside your Thala matters, not outside

எனினும் தோனியின் ஹேட்டர்ஸ் அவர் ஃபார்மில் இல்லை, அதிரடி பேட்டிங் அவரிடம் இல்லை என்பன போன்ற விமர்சனங்களை தொடர்ந்து தோனி மீது வைத்துக் கொண்டே இருந்தனர். இதற்கெல்லாம் விடை சொல்லும் வகையில் தற்போது தோனி நடித்த ஒரு விளம்பரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பரம் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் விமானத்தில் பயணிக்கும் ஒரு ஜோடி, மீம்ஸ் பத்தி பேசிக்கொள்கின்றனர். அப்போது அந்தப் பெண்ணிடம் அந்த நபர் தன்னுடைய மீம்ஸை பார்க்குமாறு கூறுகிறார். அந்த பெண்ணும் அந்த நபரின் போனில் வரும் வீடியோவை பார்க்க, அந்த வீடியோவில் ஒரு இளைஞர், ‘மனசுல தங்கம்.. மைதானத்தில் சிங்கம்.. சீறிப்பாய்ந்து வருவாரா? நம்ம தல’ என பேசுகிறார். அத்துடன்,  ‘சும்மா உளறுகிறான் சான்சே இல்லை’ என அந்த பெண்ணிடம் அந்த நபர் கூற இருவரும் சிரித்துக் கொள்கின்றனர். அப்போது அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தோனியை பார்த்த அந்தப் பெண், அந்த நபரிடம் சைகை காட்டுகிறார்.

உடனே அந்த நபர், ‘தல.. சார் .. அண்ணன்’ என வாய்க்கு வந்தபடி உளறி, “நீங்க இவ்ளோ நாளா காணோம் இல்ல .. அதனால மக்கள்” என எதையோ சொல்ல வர, அந்த நபரிடம் இருக்கும் ஹெட்போனை வாங்கிக்கொள்ளும் தோனி, பின்னர் “சவுண்டு ஓவரா இருக்குல..?” என கூறிவிட்டு புன்னகைக்கிறார். அதன்பின், “சீட்பெல்ட் போட்டுக்குங்க சார்.. ப்ளேனும் ஹெலிகாப்டரும் டேக் ஆஃப் ஆகப்போகிறது” என பின்னணியில் குரல் அறிவிப்பு ஒன்று வருகிறது. அடுத்து வரும் குரலில், “இப்போ ஆட்டம் பேசும்” என்றும் கேட்கிறது. இவற்றின் மூலம், தன்னை விமர்சிப்பவர்களுக்கு எதிராக, தோனி தான் எதுவும் பேச விரும்பவில்லை, தனது ஆட்டத்தையே பேச வைக்கப் போகிறார் என்கிற ஒரு செய்தி கடத்தப்படுகிறது. அத்துடன் ஒரு வருடமாக விளையாடாத போதிலும் 

தன்னுடைய ஆட்டம் சற்றும் குறையவில்லை என்பதை உணர்த்தும்விதமாக ப்ளேனுடன், ஹெலிகாப்டரும் புறப்படப் போகிறது என்று கூறும் விதமாக இந்த விளம்பரம் அமைந்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் போட்டியில் தோனி ஹெலிகாப்டர் ஷாட் பறக்க விடுவார் என்று புரிந்துகொண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் இந்த விளம்பரத்தை பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்காக நடந்த பயிற்சி ஆட்டத்தில் தோனி 5 பந்துகளில் 5 சிக்சர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CSK #MSDHONI #IPL