VIDEO: ‘பரவாயில்ல.. கொஞ்சம் லெந்த்-அ மாத்தி போடுங்க’!.. 100-வது ஓவரில் நடந்த மேஜிக்.. வைரலாகும் ரிஷப் பந்த் பேசிய விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜடேஜா பவுலிங் செய்தபோது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சொன்ன அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
தற்போது இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் ஷர்மா 30 ரன்களிலும், சுப்மன் கில் 8 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கன்களை இந்தியா எடுத்தது.
இந்த நிலையில் நியூஸிலாந்து வீரரை அவுட்டாக்குவதற்கு விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், நேற்றைய போட்டியின் 100-வது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட நியூஸிலாந்து வீரர் டிம் சவுத்தி, முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார்.
அப்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ‘பரவாயில்ல ஜட்டு பாய்.. கொஞ்சம் லயனையும், லெந்தையும் மாத்தி போடுங்க’ என ஜடேஜாவிடம் கூறினார். இதனை அடுத்து ஜடேஜா வீசிய இரண்டாவது பந்தில் டிம் சவுத்தி போல்டாகி வெளியேறினார். இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தோனியும் இதேபோல் பந்துவீச்சாளர்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி விக்கெட்டுகளை எடுப்பார். இந்த நிலையில் ரிஷப் பந்தை தோனியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
— pant shirt fc (@pant_fc) June 23, 2021