VIDEO: ‘யோவ்.. இந்தாய்யா...!’.. கோலி செஞ்ச சேட்டை.. ரோஹித் கொடுத்த ‘அல்டிமேட்’ ரியாக்ஷன்.. ‘செம’ வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மைதானத்தில் செய்த குறும்பு ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து நியூஸிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்திருந்தது. இந்த நிலையில் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனை அடுத்து நேற்றைய ஆட்டமும் மழையால் தாமதமாகவே தொடங்கியது. இப்போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. இதனால் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் நியூஸிலாந்து வீரர்கள் சற்று திணறினர். இதன்காரணமாக அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால் 249 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூஸிலாந்து இழந்தது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை முகமது ஷமி 4 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
Hittu😂😂 #WTCFinal2021 pic.twitter.com/tUCiFh2xSb
— Sabarish Sundaram (@VSabarish_22) June 22, 2021
இந்த நிலையில் நேற்றைய போட்டியின்போது பீல்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலி, ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் நடந்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ரோஹித் ஷர்மா குறும்பாக அவரை திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
